பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

35


காட்டு விலங்குகளாலும், வறட்சியாலும், தெருப்பினாலும், நோயினாலும், மரத்திருடர்களாலும் பெரும் அழிவுக்கு உட்பட்டு வரும் காடுகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் 'பெரியகுளம்' என்ற பெயரில் ஒரு சிறுகுளம் உள்ளது. அக்குளத்தில் உள்ளூர்ப் பறவைகளோடு வெளியேயிருந்து வரும் பிற பறவைகளும் தங்குகின்றன. அதனால் அரசு அதைப் பறவைகள் சரணாலயம் என்று அறிவித்தனர். (G.O. MS No. 237, ENVIRONMENT & FOREST (FRY) Dated 30.06.1997).

குளத்தின் பரப்பளவு 77,185 எக்டேர் ஆகும். வனத்துறையினர் பார்வையாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் வேண்டிய பார்வைக் கூட வசதி செய்துள்ளனர். சுற்றுப்புறத்தில் சமூகக் காடும், 19 வகையான தாவரங்களும் உள்ளன. குளத்தில் ஆறு வகையான மீன்களும், நீர்ப்பாம்பு முதலிய பல வகை விலங்கினங்களும் உள்ளன. அங்கு காணப்படும் 74 வகையான பறவையினங்களுள் 50 வெளியூர் இனங்கள். கோடைகாலத்தில் பறவைகள் தங்கும் முக்கிய இடமாக இது உள்ளது.

அவல்பூந்துறை, ஊஞ்சலூர், கடெசல். சுத்தாங்கண்ணி, காங்கயம், கொளாநல்லி, கொடுமுடி, தாமரைக்கரை. தாளவாடி, தலமலை, திம்பம், நசியனூர், பர்கூர் மலை, வெட்டுக்கரை, ஹாசனூர், ஆகிய நீர்வளமிக்க இடங்களும் பறவைகளைக் கவருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் 43 பறவைக் குடும்பங்களைச் சேர்ந்த 128 பறவையினங்கள் இருப்பதாகப் பறவையின ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வனச்செல்வம்

வனமே ஒரு செல்வம். அது தன்னுள் பல்வேறு செல்வங்களைப் பெற்றிருக்கிறது. யானை, புலி, சிறுத்தை, நரி, செந்நாய், கரடி, காட்டெருமை, குரங்கு, மான். காட்டுப்பூனை, மரநாய், முள்ளம்பன்றி