பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

39


வயதுக்கு வரும் முன்பே திருமணம் செய்தல், பலதார மணம், மறுமணம் செய்தல் ஆகிய வழக்கம் இவர்களிடையே உண்டு. இவர்களிடையே 'குடுவாளி' என்ற திருமண முறை காணப்படுகிறது. காதல் கொண்ட ஆணும் பெண்ணும் காட்டுக்குள் ஓடிவிடுவர். நான்காம் நாள் சோளகர்கள் ஒன்று சேர்ந்து இசைக்கருவிகளுடன் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு வந்து கோயிலில் திருமணம் செய்விப்பர்.

பவானி வட்ட மூன்றாம் குடியிருப்பான தாமரைக் கரையில் 15 வீடுகள் உள்ளன. இங்கும் வளத்துறையிடம் நிலத்தைக் கடனாகப் பெற்று விவசாயம் செய்கின்றனர்.

காடுகளிலிருந்து கல்பாசம். கடுக்காய், புளி, புங்கவிதை. பேரீச்ச இலை, கோரைப்புல் போன்ற காடுபடு சிறு பொருள்களைச் சேகரித்து வந்து நாள்தோறும் கூலி பெறுகின்றனர்.

பவானி வட்டத்தில் கன்னடம் கலந்த தமிழையும், சத்தியமங்கல வட்டத்தில் மலையாளம் கலந்த கன்னட மொழியையும் பேசுகின்றனர். தலைப்பாகையும் உடலை மூட நீண்ட துணியும் அணிந்து குடுமி வைத்திருந்த இவர்கள் வேட்டி - சட்டைக்கும் கிராப்புக்கும் மாறி வருகின்றனர்.

பெரும்பாலும் கிழியும் வரை ஒரே உடையை அணிவர். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில்லை. பல நாட்களுக்கு ஒரு முறை ஆற்றில் குளிப்பர். கல்லில் உடம்பைத் தேய்த்துக் குளிப்பர். ஆடவர்கள் கம்பளித் துணியை மேலே போட்டிருப்பர். கடின உழைப்பாளிகளான இவர்கள் முன்பு சக்கிமுக்கிக் கல்மூலமே நெருப்பை உண்டாக்கிப் பயன்படுத்தினர்.

இவர்களிடம் ஐந்து குலங்கள் உள்ளன. எஜமான் என்பவன் தலைவன், பட்டக்காரன் அவன் உதவியாள் ஆவார்.

தாளவாடி, தலைமலைப் பகுதிகளில் பன்னிரண்டு குடியிருப்புக்களில் சுமார் 3520 ஊராளிகள் வாழ்கின்றனர். காடுகளில் உணவு தேடுவதும், கால்நடை வளர்ப்பதும் வேளாண்மையும் இவர்கள் தொழில்கள். இறந்தோர் ஆவி நீலகிரிக்குப் போகும் என்று ஊராளிகள்