பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 119 (கால்களுக்கான பயிற்சிகள்) இதுவரை எடைப்பயிற்சிகளில், எடை ஏந்தி மற்றும் எடைக்குண்டுகளை வைத்துக் கொண்டு செய்கின்ற பயிற்சி முறைகளை அறிந்து கொண்டோம். இந்தப் பகுதியில், கால்களுக்கான உடற் பயிற்சிகளுக் காக, எடையுள்ள காலணிகளை அணிந்து கொண்டு, செய்கின்ற பயிற்சிகளை அறிந்து கொள்வோம். காலணிகளில், தேவையான எடைகளை சேர்த்துக் கொள்கிற வகையில் அமைப்பு இருக்கும். ஆகவே, கால்களைத் தூக்கும் வகையில் வேண்டிய அளவில், சேர்த்துக் கொண்டு, பயிற்சிகளைத் தொடர்வது, புத்திசாலித்தனமாகும். பயிற்சிகள்: படம்பார்த்து பழகவும் (1.அ) இடுப்பில் கைவைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து நிற்கவும், பிறகு, மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு, வலது காலை பக்க வாட்டில், முடிந்தவரை உயரமாக உயர்த்தவும். பிறகு, முன்புநின்ற நிலைக்கு வந்து, மூச்சைவிடவும் (10தடவை) அதே போல், வலது காலை ஊன்றிக் கொண்டு, இடது காலை உயர்த்திச் செய்யவும் (10 தடவை) (ஆ) முதலில் கூறியதுபோல் நின்று, வலது காலை முன்புறமாக முடிந்தவரைத் தூக்கிநீட்டிநிற்கவும். தூக்கிய வலது காலை, இடது காலுக்கு முன்புறமாக கீழாகக்