பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உயர்த்தி செய்வதுதான். இப்படி செய்வது மிகவும் சிறந்த பயிற்சியாகும். 3அ,3ஆ3இ. படத்தைப் பாருங்கள். ஓடிக்கொண்டு தாண்டும்போது, இடது கால் பாதம் தரையில் ஊன்றியிருக்க, வலது காலின் குதிகால், பின்புறத்தை (Buttock) தொடுவதுபோல் உயர்ந்திருக்கிறது. - இப்படி வலது கால், இடது கால் என்று மாற்றி மாற்றி உயர்த்தி வைத்து ஒடித் தாண்டித் தாண்டிச் செல்ல வேண்டும். 4அ, 4ஆ, 4இ. படத்தில், கயிறு எங்கே இருக்க வேண்டும், காலின் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுகிறது. 4.அ. கயிறு தலைக்கு மேலிருந்து வருகிறது. 4ஆ. கயிறு கால்களுக்குக் கீழாக வந்து, கால்களை தாண்டியவுடன், இடது கால் பின் புறமாகப் போக, வலது கால் தாண்டி அதே இடத்தில் வைத்திருப்பதைக் காணலாம்.