பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடறபயறசகள 131 இளமையிலிருந்து, நடுத்தர வயது தொடங்குகிற போது, உடலின் உச்சநிலையில் ஒரு இறக்கம் தெரிவதை எல்லோருமே உணரத்தான் செய்கின்றனர். அந்த மாற்றங்களை உடல் ஏற்றுக்கொள்கிறபோது, தனக்கு வயதாகிவிட்டது. தரம் கெட்டாகிவிட்டது; திறம் மட்டாகிவிட்டது என்று மயங்குகின்றார்கள் மக்கள். உண்மை தான் அது! மாற்றங்கள் உடலில் விளைகின்றன என்றோ மல்லவா! அவை என்னென்ன என்று அறிந்து கொள்வோம்! 1.கண்பார்வையில் கூர்மை குறைகிறது. 2. காது கேட்பதில் சற்று கோளாறாக, மந்தமாகிறது. 3. இரத்த ஓட்டத்தில் வேகம் குறைகிறது. அதாவது இரத்தக் குழாய்களின் அகலம் குறைந்து, இறுக்கமும் கனமாகிப்போவதுதான் அதற்கு காரணம். - 4. எலும்புகளின் கனம் குறையக்குறைய, எலும்பு களில் விறைப்புத் தன்மை ஏற்பட, வலிகளும் வேதனைகளும் உண்டாக ஆக, நிமிர்ந்து நிற்கும் உடல் தோரணையில் சற்று வளைவும் ஏற்பட்டு விடுகிறது. 5. தசைகளின் திரட்சித்தன்மை இழப்பு ஏற்படுகிறது. 6. உடலில் கொழுப்புக்கள் ஆங்காங்கே சேர்ந்து, திரண்டு கொண்டு, புடைத்துக் கொண்டு, தொந்தியாக, குண்டாகத் தெரிகிறது. 7. பாதங்களில் வலி மிகுவதும் புரிகிறது.