பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 8. விரிந்த மார்பு கொஞ்சம் குவிந்து கொள்வதும் தெரிகிறது. - இவற்றையெல்லாம் தமது உடலில் வந்து விடுவதைப் பார்த்தவுடன், ஆகா! நமக்கு வயதல்லவோ ஆகிவிட்டது என்ற உணர்வு ஏற்படுவதும் சகஜம்தான். இதற்கும்மேலே! வயதானதற்கு அறிகுறிகள் என்பதாக சிலவற்றைத் தானே தெரிந்து கொண்டோம்! இன்னும் கொஞ்சம் விரிவாக, விளக்கமாகத் தெரிந்து கொள்வோமே! 1. முன்பெல்லாம் எளிதாக, விரைவாக செய்து முடித்த வேலை, தற்போது தாமதமாக நடைபெறுவதும், சற்று கஷ்டமாகவே செய்ய முடிவதும் புரிகிறது. 2. சற்று உயரமான பகுதிக்கு அதாவது மாடி அல்லது மலைப்பகுதிகளில் ஏறும்போது, அதிகமாக மூச்சு வாங்குகிறது. 3. தசைகள் உருவம் இழப்பதும், கொழுப்புகள் உடலைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொள்வதின் காரணமாக, உடலே பார்ப்பதற்கு சற்று விகாரமாக, விவகாரமாகத் தோற்றமளிக்கிறது. - 4. பெண்கள் என்றால், மாதவிலக்கு வந்து பயமுறுத்துகிறது. 5. வயிற்றுக்கு முன்புறம் தொந்தி, இடுப்புக்கு பின்புறம் கொழுப்புகள் குந்தி, உருவத்தை வேற்றுமைப் படுத்திக் காட்டுகிறது.