பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 135 2. முதுகெலும்பு எப்பொழுதும் நிமிர்ந்த நிலையில் இருப்பது, வயிறும் மடிந்து கிடக்காமல், விறைப்பாக இருப்பது, மார்பையும் தலையையும் நிமிர்த்தி வைத்திருப்பது நல்ல பழக்கம். - 3. தரையில் இருந்து கனமான பொருட்களைத் தூக்குகிறபோது, குனிந்து தூக்கினால், முதுகிற்குள் காயமும், முதுகுவலியும் ஏற்படுகிறது. ஆகவே, நிமிர்ந்து முதுகெலும்பு இருப்பதுபோல், நின்று, அப்படியே நேராக சரியாகக் கீழே வந்து பொருளைத் தூக்கினால், அது எளிதாகவும், வேதனைதராமலும் செயல்பட உதவும். - ஏதாவது கனமான பொருள் அல்லது அலமாரி, மேஜை போன்றவற்றைத் தள்ளுகிறபோது, குனிந்து கொண்டு, அல்லது முதுகை வளைத்துக் கொண்டு, தள்ளினால், உள்ளுறுப்புக்களுக்கு நோவும் வேதனையும் விளையும். - ಆ5ಅ கைகள், தோள்கள் வளைந்து கொள்ள, கால்களை விரைப்பாக வைத்துக் கொண்டு தள்ளுகிற போது, எளிதாக அமையும். இப்படிப்பட்ட பழக்கங்களை பழக்கத்தில் வைத்துக்கொண்டு, பயிற்சிகள் சிலவற்றை செய்து வருகிறபோது, நாற்பது வயதுக்கு நல்ல இளமை தோற்றத்தையும், வலிமை மாற்றத்தையும் வழங்கும்.