பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 151 மேலே உயர்த்தி வைக்கவும். இடுப்பை வளைக்காமல், நிமிர்ந்து நிற்கவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, வலது காலை முடிந்த அளவு, முன்புறத்தில் தூக்கி வைத்து. முழங்காலை 00 டிகிரி அளவில் இருப்பது போல, வைத்து நிற்கவும். 3. பிறகு தலைக்கு மேற்புறமாக உள்ள இரு கைகளையும் கொண்டு வந்து. வலது முழங்காலின் முனைப் பகுதியைக் குனிந்து தொடவும். 4. பிறகு, நிமிர்ந்து நின்று, மூச்சு விட்டு, இடது காலுக்கான பயிற்சியை இதே போல் செய்யவும். (20 தடவை) பயிற்சி: 6 1. கால்களை அகலமாக விரித்து நிற்கவும். கைகளை தலைக்கு மேற்புறத்தில், உயரமாக உயர்த்தி இருக்கவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, நன்கு குனிந்து, வலது காலை, இரண்டு கைகளாலும் தொட முயற்சிக் கவும். முதலில் முழங்கால் வரை தான் தொட முடியும். பழகப் பழக, கணுக்கால் வரை தொடலாம். மேலும் பழகினால், முன் பாதத்தையும் தொடலாம். 3. தொட்ட பிறகு, மீண்டும் கைகளை தலைக்கு மேலே உயர்த்திய பிறகு தான், மூச்சு விடவேண்டும்.