பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 153 அங்கிருந்து பின் புறத்திற்குக் கொண்டு போய், எவ்வளவு உயரத்திற்கு உயர்த்த முடியுமோ, அந்த அளவு யர்த்தவும். பிறகு மூச்சு விடவும். 2. அதே போல், இடது காலுக்கும் செய்யவும். ஒவ்வொரு காலுக்கும் 20 தடவை செய்யவும். பயிற்சி. 9 நாற்காலியின் பின் புறத்தில் நின்று, நாற்காலியின் மேல் பகுதியை, பிடித்துக் கொண்டு - விரைப்பாக நிற்கவும். நன்கு மூச்சிழுத்துக் கொண்டு, நாற்காலியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அப்படியே குதிகாலில் உட்காருவது போல உட்காரவும். பிறகு எழுந்து நின்று மூச்சு விடவும். 20 தடவை உட்கார்ந்து எழவும். பயிற்சி. 10 நாற்காலியில் நன்கு வசதியாக உட்கார்ந்து கொள்ளவும். நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, இடது. கையால் இடது கால் பக்கத்தில் குனிந்து தொடவும். அப்பொழுது வலது கை, தலைக்கு மேற் புறத்தில் உயர்த்தவும். கால்களை வளைக்காமல் தொடவும். அதுபோல, வலது கால் பகுதி தரையைத் தொடவும். (20 தடவை) -