பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒரு இடத்தில் கால்களை மடக்கி உட்காருவது, முன்புறம், பின்புறம் பக்கவாட்டில் என்று வளைந்து, குனிந்து நிமிர்வது, அதுபோல நின்று கொண்டும், படுத்துக் கொண்டும் உடலை, மடக்கியும், நிமிர்த்தியும் செய்கின்ற உழைப்பும் உடற் பயிற்சிதான். அதற்கு யோகாசனம் என்றுபெயர். காலையிலும், மாலையிலும் கைகளை வீசி, நிமிர்ந்து நடக்கின்ற நடையும், ஒரு உடற்பயிற்சிதான். மெதுவாக நடக்கலாம். முடிந்தால் வேகமாக ஓடலாம். இவை எல்லாம் எளிய உடற் பயிற்சிகளின் ஒரு பகுதிதான். இது வரை முன்பகுதியில் விளக்கப்பட்ட படங்கள் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால், அவற்றை எல்லாம் முறையாகச் செய்யுங்கள். உங்கள் சோம்பலை நீக்குங்கள். உங்கள் உடல் குறைகளைப் போக்குங்கள். குறைவற்ற செல்வமாகிய, நோயற்ற உடலுடன், நிறைவாழ்வு வாழுங்கள் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.