பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/148

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

146 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா படுத்துக் கொண்டு, கைகள் இரண்டையும், பின் பக்க முதுகில் இருப்பது போல், இணைத்து வைத்துக் கொள்ளவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, தலையை முன்புறமாக, மேற்புறமாக உயர்த்தி, நெஞ்சில் தரைபடுவது போல இருந்து, உயர்த்தவும். முதல் நிலைக்கு வந்த பிறகு மூச்சை விடவும். 20 தடவை செய்யவும் பயிற்சி: 8 1. பயிற்சி 7க்கு இருப்பது போல, குப்புறப் படுத்துக் கொண்டு, தலையின் பின் புறமாக இரு கைகளைக் கொண்டு வந்து கட்டிக் கொள்ளவும். தலையை இறுக்கமாக, அழுத்திப் பிடிக்கக் கூடாது, 2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, தலையை மேற்புறமாக உயர்த்தவும். கால்களை தரையிலிருந்து, மேலே தூக்காமல், நெஞ்சு பாகம் வரை உயர்த்திச் செய்யவும். முதல் நிலைக்கு வந்த பிறகு மூச்சை விடவும். 20 தடவை செய்யவும். பயிற்சி: 9 1.குப்புறப் படுத்துக் கொண்டு, தோள் புறத்தில் இருப்பது போல, கைகள் இரண்டையும், தரையில் உள்ளங்கையால் ஊன்றியிருக்கவும்.