பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 2. உடற்பயிற்சிக்குரிய : டி

உண்மையான விளக்கம்:
  • சி

உலக மக்களின் உவப்பான வாழ்க்கையின் உண்மையான வழித்துணை உடற்பயிற்சிதான். வழித்துணையில் கூட உண்மை, பொய் என்று இருக்கிறதா? - ஆமாம்! சிரித்துச் சிரித்துச் சொல்பவர்கள் கெட்டுப் போகச் சொல்வார்கள் அழுதழுது கூறுபவர்கள் வாழ வழி காட்டுவார்கள்' என்பது பழமொழி முதலில் சுகத்தைக் காட்டிவிட்டு, பின்னாலேயே பெருந்துன்பத்தைக் கூடவே கூட்டி வருகின்ற எத்தனையோ செயல்கள் நம் எல்லோருக்கும் தெரியும். அவைகள் பொய்யான வழித்துணை. முதலில் நோக்கத்தைக்கூறி, இடையில் இன்னலைக் காட்டி, முடிவில் தீராத இன்பத்தைச் சேர்த்துத் தருகின்றது தான் உண்மையான வழித்துணை. அதனால்தான், 'மூத்தோர் சொல்லும், முது நெல்லிக்கனியும், முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்” என்றனர்.