பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 27 இரத்த ஓட்டம் அந்தப் பகுதிக்குத் தங்கு தடையில்லாமல் சென்றால்தான், நாம் எதிர்பார்க்கும் எல்லா காரியங்களும் முறையாகவும், சரியாகவும், தரமாகவும் நடக்கும். நாம் பயிற்சியின் போது பெறுகின்ற அதிகமான உயிர்க்காற்று (Oxygen), இரத்த ஓட்டத்தை விரைவு படுத்துகிறது. இரத்தத்தை செழுமையாக்குகிறது. இரத்த ஓட்டத்தின் விரைவால் என்ன பயன் எற்படும்? இருக்கிறது. நமது நலமான வாழ்க்கையின் அடிப்படையே நமது இரத்த ஓட்டத்தின் செழுமையில் தான் நிறைந்து கிடக்கிறது. - உடலெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இரத்தம்தான் நமது உடலில் போக்குவரத்துத் துறைப் பொறுப்பை ஏற்றிருக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவின் ஊட்டமுள்ள சத்துப் பொருட்களை, சிறுகுடலில் இருந்து எடுத்துக் கொண்டு சென்று, உடலில் உள்ள எல்லா வகையான செல்களுக்கும் ஊட்டுகின்றது. உள்ளிழுக்கும் காற்றிலிருந்து உயிர்க் காற்றைப் பெறுகிறது நுரையீரல் தேவை யென்று நுரையீரல் பெற்றக் காற்றை, தேனோ திரவியமோ என்று சேர்த்தனைத்துக் கொள்வது போல், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் ஏந்திக் கொண்டு சென்று, எல்லா செல்களுக்கும் கொடுக்கின்றன. உறுப்புக்கள் இயங்கும்போது உண்டாகின்ற கழிவுப் பொருட்களை, கரியமிலவாயுவை, செல்களில் இருந்து