பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அனுப்பும் பொறுப்பு யாரைச் சேர்ந்தது? இதயத்தைத் தானே! - பயிற்சியின்போதும், பயிற்சிக்குப் பிறகும் உழைக் கின்ற இதயத்தின் வேலை, எளிதாக மாறுவதற்கு, இன்னொரு காரணமும் இருக்கிறது. உடற் பயிற்சிக்குப் பிறகு, இரத்தம் சூடேறிவிடுகிறது. சூடேறிய இரத்தம் சுமுகமாக பல்வேறு பகுதிகளுக்கும் செல்கிறது. இதயமும் எளிதாக எல்லா பாகங்களுக்கும் அனுப்பி விட்டு அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்கின்றது. இதை சாதாரண உடலமைப்பு உள்ளவன் இதயத் துடிப்பையும் - சக்தியுள்ளவன் இதயத் துடிப்பையும் ஆராய்ந்தறிந்து உணர்ந்து கொள்ளலாம். பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு 139 முறை 5 வயது குழந்தை * * 88 முறை சாதாரண மனிதன் * * 72 முறை வலிமையுள்ளவன் + + 45 முறை நிமிடத்திற்கு 72 முறை இயங்குகின்ற இதயத்தின் உழைப்பையும் ஓய்வையும், 45 முறை இயங்குகின்ற இதயத்தின் உழைப்பையும், ஒய் வையும் நீங்களே கணக்கிட்டு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஆகவே, உடற்பயிற்சி உடலைக் காக்கவும், கண் காணிக்கவும், கவினுற வளர்க்கவும், கனிவோடு காக்கவுமே உதவுகிறது என்றால் அது மிகையாகாது. உடற் பயிற் சியே வாழ்க்கையின் உண்மையான துணைவன். -