பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 41 பலத்தையும், பண்பையும், நிர்வாகம் செய்யக்கூடிய ஆற்றலையும், நீண்ட நிம்மதியான ஆயுளையும் பெற்று வாழ்கிறான். வாழ்வுக்குத் தேவை இவைகள்தானே! இதைவிட வாழ்வில் ஒருவனுக்கு வேறென்ன சுகங்கள் வேண்டும்? (4) இதயம், நுரையீரல் வலிமை பெறுகின்றன. வலிமையான மார்புக்கூட்டை வளர்க்கின்ற உடற் பயிற்சி, அந்தப் பணியோடு, நுரையீரலையும் பெரிதாக அமைத்துவிடுகிறது. நுரையீரல் பெரிதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் வளர வளர, நமக்கு வேண்டிய உயிர்க் காற்றினை உள்ளே நிரப்பிக் கொள்கின்ற சக்தி பரிபூரணமாகக் கிடைக்கிறது. உயிர்க் காற்று அதிகமாக உள்ளே உலவும்போது, இரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. உணவு எளிதாக ஜீரணிக்கப்படுகின்றது. செல்கள் உயிர்க் காற்றை நிறையப் பெறுகின்றன. சேர்ந்துவிடுகின்ற கழிவுப் பொருட்கள் விரைவாக வெளியேற்றப்படுகின்றன. உடல் தூய்மையடைந்து துப்புரவாக மாறுகின்றது, அதனால் உடல் எந்த நேரமும் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் நடமாடுகிறது. இதயத்தின் தசைகளை வலிமைப்படுத்துவதால், இதயம் ஒழுங்காகத் தன் கடமையை ஆற்ற உதவுகிறது. உரிய நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொள்ளவும் தூண்டுகிறது. உடற் தசைகள் தொள தொளவென்று இருந்தால், அந்த இதயத் தசையும் அப்படித்தான் இருக்கும். அதுபோன்ற இதயம் அடிக்கடி