பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 5. பயன் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள் தினந்தோறும் பத்து நிமிடம் பயிற்சிகளைச் செய்யுங்கள். பயிற்சி உங்கள் அன்றாட வேலைகளைக் கெடுக்காது. உடலும் வலிக்காது. உங்கள் வேலையில் உற்சாகம் பெருகும். உடலில் ஆண்மை நிறையும், உணர்வில் இளமை மிளிரும்...... தேகத்தில் அழகு ஒளிரும். - - - இனி, பயிற்சியைத் தொடங்கலாம். பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், பயிற்சி செய்வதற்குரிய ஒரு சில முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கென்று சிலகலைச் சொற்கள் உண்டு. அவைகளைக் கீழே தந்து, அவைகளுக்குரிய விளக்கத்தையும் தந்திருக்கிறோம். மூச்சிழுத்தலை முறையாக அறிந்துகொண்டு பொறுப்புடன் செய்ய வேண்டும். குறிப்பிட்ட அளவே தான் செய்ய வேண்டும். அன்றாடம் உணவு உட்கொள்ளு தல் போல, அலுவலகத்திற்குச் செல்வதுபோல பயிற்சியையும் ஒரு கடமையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.