பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 67 நல்ல செழுமையான, தரமான இதயம், அதிக அளவில் இரத்தம் இறைத்து, இனிமையாக செயல்களை வளர்க்கின்றன என்பது நீங்கள் அறிந்ததே! ஒய்வு நேரத்தில் கூட, இரத்தம் இறைக்கும் அளவு இதயத்திற்கு 25% அதிகமாகிறது. தேவையான, அதிகமான அளவு உடற்பயிற்சிகள் செய்கிற சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 51.3% அளவு அதிகமாக இதயம் இறைக்கிறது என்பதாக, வல்லுநர்கள் கண்டறிந்திருக்கின்றார்கள். - உடற்பயிற்சி செய்யாத ஒரு மனிதனின் இதயம் ஒரு மிெடத்திற்கு 80 முதல் 100 தடவை இயங்குகிறது அதாவது ஒரு நாளைக்கு 1,15,200 முதல் 1,44,00 தடவைகள் இதயத்தின் இயக்கம் நடைபெறுகிறது. உடற்பயிற்சி செய்து வருகிற ஒரு மனிதனின் இதயம், 60 முதல் 70 தடவை தான் இயங்குகிறது. அதாவது ஒரு நாளைக்கு 86,400 முதல் 1,00,800 தடவைகள்தான் இதயத்தின் இயக்கம் நடைபெறுகிறது. இதிலிருந்து நாம் அறிவது என்ன வென்றால், உடற்பயிற்சி செய்கிறவரின் இதயம் தரமாகிக் கொள்கிறது. திறமாகி விடுகிறது; குறைவான எண்ணிக்கையில் இயங்கி, நிறைய இரத்தத்தை இறைத்து, உடல் உறுப்புக்களை நனைத்து, நன்மை பல செய்கிறது என்பதுதான். இதனால் என்ன லாபம் என்றால், இதயத்திற்கு அதிகக் களைப்பு அண் டுவதில்லை. வலியும் வேதனையும் வருவதில்லை.