பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 79 கீழே விளக்கப்படுகிற பயிற்சி முறைகளில் எல்லாம், உங்களுக்கு எது பொருத்தமானதாக இருக்கும் என்பதை, நீங்கள் உணர்ந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வயது, உங்கள் உடல்நல நிலை; உங்களின் தொழில்; செய்கிற வேலையின் தன்மை; உங்களுக்குக் கிடைக்கிற ஒய்வு நேரம்; அதில் உடற்பயிற்சிக்காக ஒதுக்க முடிகிற நேரம் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சரியான பயிற்சிமுறையைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த மாதிரிப் பயிற்சி முறையைத் தேர்ந் தெடுத்தாலும், அதனைத் தொடர்ந்து தினந்தோறும் செய்யவேண்டும். செய்தாக வேண்டும் என்ற உறுதியை lங்கள் எடுத்தாக வேண்டும். மெதுவாகவும், சரியாகவும், கவனமாகவும் செய்கின்ற பயிற்சிகளே, எதிர்பார்த்த பலனைத்தரும், வாழ்க்கையின் எதிர்பார்ப்புக்களை வெற்றிகரமாக (solo த்துக் கொடுக்கும். அவை வருமாறு: 1. நீளாத இயக்கப் பயிற்சிகள் (Isometric) 2. நீளும் இயக்கப் பயிற்சிகள் (isotonic) 3. நீண்டு நீளா இயக்கப் பயிற்சிகள் (isokinetic) 4. g36, £160601, Luíspálē,6T (Meditative Methods) 5. விளையாட்டுக்கள் (Sports) 6. Gle, Lü Luolo)&lā6m (Heat Treatments) தசைப் பிடித்து விடும் பயிற்சிகள் (Massages)