பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மல் நீண்ட நேரம் உழைக்கின்ற ஆற்றலைத் தான், தசை நீடித்த உழைப்பு என்று அழைக்கிறோம். geogé géâl: (Muscle Power) தசை வலிமை என்பதற்கும், தசைச் சக்தி என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தசை வலிமை என்பது அதன் அமைப்பும் , ുള്ഥ. தசை நீடித்த உழைப்பு என்பது தொடர்ந்து பணியாற்றுகின்ற செயல்திறன். தசை சக்தி என்பது, ஒரு வேலையை விரைவாகச் செய்து முடிக்கின்ற ஆற்றல். இப்படிப்பட்ட சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி? தசைகளை இயக்குகிற போது, மேற்கொள்கிற விரைவான உடற் பயிற்சிகள்தான். இந்த உடற்பயிற்சிகள் மூன்று வகைப்படுகின்றன 1. தசைகள் நீட்டிச் சுருக்கும் பயிற்சிகள் (Isotonic) 2. எடைப் பயிற்சிகள் (Weights) 3. எதிர்ப்புத் தடையுள்ள பயிற்சிகள் (Resistences)