பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஆரம்ப சூரத்தனம் இந்த எடைப் பயிற்சிக்கு வேண்டாம். - பயபக்தியுடன், நிதானமாக, பொறுமையாக, திறமையாகச் செய்யவும். - stol & ©6úr() (Dumb Bell) எடைக் குண்டு என்பது இருபுறமும் உருண்டை வடிவமாகவும், இடையிலே கைபிடிக்கும் அளவுக்கு இடைவெளியுடனும் இருக்கும். அந்த எடைக்குண்டு சாதாரணமாக 5 பவுண்டு, 8 பவுண்டு, 10 பவுண்டு என்ற முறையில் கிடைக்கும். இன்னும் எடை ஏந்தி போல (Bar Bell) 18 அங்குல நீள இடைவெளி உள்ள கம்பியில் இருபுறமும் அடைப்பானும் மரையும் வைத்து, வேண்டும் போது பல இரும்புத் தட்டுக்களைச் சேர்த்துக் கொள்ளும் வசதியுடனும் கிடைக்கிறது. பயிற்சி முறைகள்: மார்புத் தசைகளுக்காக (1) கால்களை அகலவைத்து, இருகைகளிலும் எடைக் குண்டுகளை இறுக்கமாய்ப் பிடித்து, தோளின் மேல் வைப்பது போல் வைத்திருந்து, தலைக்குமேலே ஒரு கையை உயர்த்திக் கீழிறக்கி, பிறகு மறு கையை ஏற்றி இறக்கி, அதேபோல் இரு கைகளையும் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும் (15 தடவை). உயர்த்துமுன் மூச்சிழுத்து, இறக்கியவுடன் மூச்சுவிட வேண்டும். (2) முன் கூறிய பயிற்சி போலவேதான் நிலை. ஆனால் இப்பொழுது இரண்டு கைகளையும்