பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

19


இப்பொழுது நாம் ஒரு ஒருமித்த கருத்துக்கு வருவோம். இந்த உலகத்தில் நீ வாழ வந்து இருக்கிறாய். நீ வாழ வேண்டும். வாழ்ந்து கொள்வது உனது கடமை மட்டும் அல்ல. உனக்கு உள்ள உரிமையும் கூட. அந்த உரிமை நிறைந்த, பெருமை மிகுந்த வாழ்வை நீ ஒழுங்காக வாழ வேண்டும்.

அதாவது வெற்றிகரமாக வாழ்ந்தாக வேண்டும். அதற்காகச் செய்யத்தக்க செயல்கள் என்ன, என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். அதற்கான ஆற்றல் உன்னிடம் இருக்கிறது என்கிற கருத்தைத்தான் ‘வாழ்க்கை’ என்கிற சொல்லிலே இருந்து நாம் கட்டளையாகப் பெற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் வாழ்கிற போது என்ன ஆகும்? அவர்களது வாழ்க்கை, கீழ்க்கை ஆகிவிடும்.

‘கீழ்க்கை’ என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? ஈனக்குலத்தார், இழிகுலத்தார்; ஈனம் என்றாலே, கூற முடியாத குறைபாடுகளும், கேடுகளும், இழுக்குகளும், பொல்லாங்குகளும் நிறைந்தது என்று சொல்வார்கள். அத்தகைய ஈன வாழ்க்கைக்குப் போய்விடக்கூடாது என்பதை, ‘வாழ்க்கை’ என்ற சொல் இரகசியமாக வளைத்துப் போட்டுக் கொண்டு இருக்கிறது பார்த்தீர்களா!

வாழ்க்கை என்ற சொல்லை மதித்து வாழ்ந்தால், உயர்ந்த வாழ்வைத் தரும். மேலான வாழ்வைத்தரும்.

மேல் என்ற சொல்லுக்கு ‘வருங்காலம்’ என்ற ஒரு பொருளும் உண்டு. ஆக, மேல்க்கை என்கிற மேன்மை மகுந்த வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கு, வாழ்க்கை என்பது