பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


இசை, நாடகம் போன்ற நுண்கலைகள், எல்லாமே பயன்படுகின்றன. வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்புகிறவர்கள், வேகத்தை கொஞ்சம் அறிவார்ந்த முறையில் பயன்படுத்தினால், சேரவேண்டிய இலட்சியத் தூரத்தைச் சீக்கிரமாகச் சென்றடைந்து, பயன்பெற்று வாழ முடியும்.

2. விவேகம்

அறிவான வேகம் என்பதனையே விவேகம் என்று அழைக்கிறோம். ‘வி’ என்றால் அறிவு. ‘விவேகம்’ என்றால் அறிவான வேகம். எதை அறிவான வேகமென்று சொல்லுகிறோம் என்றால், ஒரு காரியம் செய்வதற்கு முன்னே, எண்ணித் துணிவது. சிந்தித்துத் தெளிவது. முழுமுனைப்புடன் செயல்படுவது. வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடி வினையாற்றுவது.

இவ்வாறு துணிந்த பிறகு மீண்டும் எண்ணுவதையோ, பின் வாங்குவதையோ, இழுக்கு என்று மனதுக்குள் நினைப்பது. இதுதான் அறிவான விவேகம். விவேகம் உள்ளவர்களைத்தான் விவேகி என்பார்கள். அவர்கள் செயலிலே வேகம் இருக்கும். சிந்தையிலே விவேகம் இருக்கும். ஒருவிதக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தே இவர்கள் செயல்படுவார்கள்.

3. யோகம்

இது மூன்றாவது நிலை. முதலாவது உடலின் வேகம் இரண்டாவது உள்ளத்தின் வேகம். மூன்றாவது உடலும் உள்ளமும் ஒடுங்கிப் போய் ஒருங்கிணைந்து செயல் படுகிற வேகம். இதுதான் யோகம். உடலால் ஓரிடத்தில்