பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

23


இருந்து, உள்ளத்தை அலைபாய விடாமல் ஓரிடத்தில் வைத்து, ஒரு காரியத்தில் சித்தியடைகிற சீரிய முயற்சியை மேற்கொள்வதுதான் யோகம். இந்த மூன்றாவது நிலையும் மனிதனின் கட்டுப்பாட்டிற்குள்ளதே.

ஓரிடத்தில் அமர்ந்து இருப்பதற்கு ஆசனம் என்றும், உள்ளத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதைத் தியானம் என்றும் சொல்வார்கள். ஆசனமும், தியானமும் ஒருவரை அறிவிலும், ஆற்றலிலும், அந்தரங்க சுத்தியிலும், ஆர்ப்பாட்டமான மனோ தைரியத்திலும் வாழ வைக்கும்.

4. வியோகம்

இது காடுமலைப் பிரதேசம்போல. நமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாதது. வியோகம் என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? வியோகம் என்றால் இறப்பு என்று அர்த்தம். இறப்பு மட்டும் அல்ல பிறப்பும் நம் கையில் இல்லை. இறக்கிறவரை வாழ்வதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அது எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் நம்முடைய சமத்துவ, சமத்காரமும் அடங்கிக் கிடக்கிறது.

புத்திசாலி மனிதன் தான் பெற்ற வாழ்க்கையைப் பெருமையாகக் கருதி பேணி வாழ்கிறான். முட்டாளானவன் மோசமான ஆண்டி போல பெற்ற உடலென்னும் தோண்டியைப் போட்டு உடைத்துத் தானும் அழிகிறான். தன் தேசத்தையும் அழிக்கிறான். இதை வாழ்க்கையின் இரகசியமாகக் கொண்டால் அது வியோகமான வாழ்க்கைதானே!

☐☐☐