பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

25



இந்த ‘மனிதன்' என்ற சொல்லையும் இரகசியமாக இப்படித்தான் வடிவமைதது விட்டுச் சென்று இருக்கிறார்கள்.

மிகச் சாதாரணமாக உச்சரிக்கப்படுகின்ற ’மனிதன்’ என்ற சொல் எத்தனை விதமான எச்சரிக்கைகளை, உச்சக்கட்டமான அறிக்கைகளை உள்ளடக்கி வைத்துக் கொண்டு இருக்கிறது தெரியுமா!

மனிதன் என்ற சொல்லை மீண்டும் ஒருமுறை படியுங்கள். ஒரு ஆரஞ்சுப் பழத்தில் சுளைகள் அழகாக அடங்கி அமைந்து உள்ளதுபோல இந்த சொல்லுக்குள்ளே பலவித வீரியம் நிறைந்த அழகான சொற்கள் அடுக்கி வைக்கப்பட்டு, இருக்கின்றன.

'ம, மன், மதன், மன்மதன், தமன், தன், னிதன், தம, தனி' ஒவ்வொரு சொல்லும் எத்தனை உயிரோட்டமாக உயிர்ப்புச் சக்தியுடன் விளங்குகிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

‘ம' - என்றால் காலம், நேரம். ‘மன்' என்றால் நிலை. பெற்ற என்பதாம், 'மதன்’ என்றால் அழகானவன். 'மன்மதன்’ என்றால் காணக் கவர்ச்சியானவன். ‘தமன்’ என்றால் உற்றான், உறவினன். ‘தம' என்றால் நிரம்பப் பற்றவன். 'தன்' என்றால் ஆத்மா உடையவன். 'னிதன் என்றால் நித்தியமும் இவ்வாறு இருப்பவன். ‘தனி’ என்றால் ஒப்புவமை இல்லாதவன்.

இனி இந்த அர்த்தத்தை எல்லாம் இனிதாகத் தொகுத்துப் பார்க்கலாமே.