பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33



இரகசியம் - 3

அம்சம்

ருவனைப் பார்த்து அழகானவன், அறிவானவன், திறமையானவன், தேர்ச்சி பெற்றவன் என்று புகழும் போது, அது அவனைத் தனியாகக் குறித்துக் காட்டுவது போல் அமைகிறது. அது ஒரு முழுமையான போற்றுதலோ, புகழ்ச்சியோ இல்லை.

அதையே அவன் அம்சமானவன். அம்சமாக இருக்கிறான் என்று சொல்கிறபோது ஒரு முழுமையான திருப்தி ஏற்படுகிறது. 'அம்சம்' என்பது அனைத்துச் சிறப்புக்களையும் இணைத்துப் பிரிக்கிற சொல்லாக இருப்பதினால்தான், அம்பாளைக் குறிக்கும்போது, 'அம்சவர்த்தினி' என்று கூறுகிறார்கள்.

அப்படி என்றால் 'அம்சம்' என்ற சொல் அகில உலக இரகசியத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறதல்லவா?