பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

31


கொண்ட உயிராகிய ஆன்மா. 'பாசம் ' என்பது உடலுக்குள்ளே கீர்த்தி இயற்கையாகத் தோன்றுகின்ற செயல்களின் சேட்டைகள். இந்த மூன்றையும் பக்குவப்படுத்துகிறபோதுதான் ஒருவனின் வாழ்வானது அம்சமாக விளங்குகிறது. வம்சமான வலிமையாகத் துலங்குகிறது.

நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிய பெரியோர்களை மூன்று வகையாகப் பிரித்து மதித்து மரியாதை செய்வோம். முதலாமவரை வாத்தியார் என்போம். இரண்டாவது வருபவரை ஆசிரியர் என்கிறோம். மூன்றாமவரைக் குரு என்கிறோம். மூன்று பேர்களுமே வழிகாட்டிகள்தானே. ஆனால் அங்கே ஏதோ நுண்ணிய வேற்றுமை இருப்பது போல நமக்குத் தெரிகிறது.

உடலுக்குப் பயிற்சி தருபவரை வாத்தியார் என்கிறோம். மனதிற்குப் பயிற்சி தருபவரை ஆசிரியர் என்கிறோம். உணர்ச்சிகளை அடக்கி ஆளப் பயிற்றுவிப்பவரைக் குரு என்கிறோம்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் இதயத்தில் தெளிவு பிறக்கும் என்று நீங்கள் உங்களுக்குள் சொல்லிக் கொள்வது எனக்கும் காதில் விழுகிறத.

வடமொழியிலே, 'கவாத்து' என்றால் உடற்பயிற்சி என்று அர்த்தம். உடற்பயிற்சி கற்றுத் தருபவருக்குக் 'கவார்த்தியார்' என்று பெயர். கவாத்தியார் என்று அழைத்த சொல்தான் பிறகு வாத்தியாராக மாறியது. உடலுக்கும் பயிற்சி தருகிற உபாத்தியார் என்று மருவி