பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்



1. வாத்தியார்

உடலுக்குத் தினம் பயிற்சி செய்பவரைப் பயில்பவர் என்று சொல்கிறோம். தினம் உடலுக்குப் பயில்பவர்தான் பயில்பவராகப் பெயர்பெறுகிறார். அவ்வாறு பயில்பவர், பயில்பவன் என்ற சொற்கள்தான் பயில்வான் என்று மருவி வந்தது. ஆக, உடற்பயிற்சியைக் கற்றுத் தருகிறவர் வாத்தியார், கற்றுக் கொள்கிற சீடன் பயில்வானாக மாறுகிறான்.

ஆகவே உடலைப் பதப்படுத்துகிற, இதப்படுத்துகிற, சுகப்படுத்துகிற பணியை மேற்கொண்டு உடலைக் காப்பாற்றுகிறவர் வாத்தியார் ஆவார்.

2. ஆசிரியர்

மனதைப் பக்குவப்படுத்துகிறவரை ஆசிரியர் என்று அழைப்பது நமது மரபாக இருக்கிறது.

'ஆசு+ எறியவர்' என்று பிரிகின்ற ஆசிரியர் என்ற வார்த்தைக்கு ஆசு என்றால் குற்றம் என்றும், எறியர் என்றால் விரட்டி அடிப்பவர் என்றும் பொருள் உண்டு.

எங்கக் கற்றக்கை இவர் விரட்டியடிக்கிறார் எனபதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். ஒவ்வொருவர் மனதிலும் ஆறு குற்றங்கள். அதாவது ஆறு மாசுகள் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன.

அவை காமம், குரோதம், மோசம், லோபம், மதம், மாச்சர்யம்.

இந்த ஆறு குற்றங்களும், ஆறு மாசுகளும், கால்கள், கைகளை அலட்டிப் பரப்பிக் கொண்டு மனதுடியடிக்கி