பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


இன்னும் சில முகங்கள் வீங்கிக் கிடக்கும். இப்படிப்பட்ட முகத்தில் எப்படிச் சந்தோசம் வரும். குறைந்தது எட்டு மணி நேரமாவது உறங்க வேண்டும் என்பதுதான் அறிஞர்களின் அறிவுரையாகும்.

எட்டு மணி நேர உறக்கந்தான் ஒருவரை ஆசுவாசப் படுத்துகிறது. அன்றலர்ந்த மலராக அவரைத் துயில் எழுப்புகிறது. தூக்கம் என்பதற்கும் இதே மாதிரிப் பொருள்தான் உண்டு.

‘தூ’ என்றால் தூய்மை , நன்மை . ‘கம்’ என்றால் சந்தோசம் என்பது பொருள். நல்ல தூக்கமென்பது, தூய்மையைக் கொடுத்து, நன்மையைச் செய்து சந்தோசத்தை நிலை நிறுத்துவது ஆகும்.

யாராவது ஒருவர் எனக்குத் தூக்கம் வரவில்லை என்று சொன்னால் அவர் உழைக்க மறுக்கிறவர், உழைப்பை வெறுக்கிறவர். உடலால் செய்யும் சேவைகளைக் கேவலம் என்று நினைக்கிறவர். தூக்கம் வராததால் நான் தூக்கமாத்திரை போட்டுக் கொள்கிறேன் என்று தன் செல்வச் செழிப்பைக்காட்டிக் கொள்பவர். அவர்களுக்கு உறக்கம் என்பது வேதனை தரும் விஷயந்தான்.

தூக்கம் வராத பெண்ணொருத்தியைப் பத்துப் பட்டு மெத்தைகளை அடுக்கி அதில் படுக்க வைத்தபோது, புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள், ஏதோவொன்று உறுத்துகிறது என்றாளாம். அது என்னவென்று பார்த்தால் அது மயிலிறகாக இருந்ததாம்.

அதே நேரத்தில் தொழிலாளி ஒருவன் வீதியோரத்தில், சாக்கடை நாற்றத்தில், கொசுக்கடிகளுக்கு