பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

உடை என்று பெயரிட்டனர். இந்த உடையை எப்படி உடுத்திட வேண்டும் என்பதைக் குறிக்கவே உடுக்கை என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.

'கை' என்றால் ஒழுக்கம். ஒழுக்கமாக உடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உடுக்கை என்று பெயர் வைத்தனர். உடுக்கை என்ற அந்தச் சொல் ஒரு மனிதனின் மானத்தைக் காப்பாற்றவே உதவுகிறது என்று சொன்னால் அது உண்மைதான்.

அதனால்தான் வள்ளுவரும், 'உடுக்கை இழந்தவன் கைபோல' என்றார். ஒழுக்கக் குறைவாக உடையணிந்து கொள்கிறவனுடைய ஒழுக்கமும் பாழாகிறது என்பதால் தான் கை போல என்றார். ஒருவனைப் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போன்ற ஆடையணிந்தால் அவனைப் பார்த்தவுடனேயே எல்லோருக்கும் பிடித்து விடுகிறது. அவனிடம் ஒரு அபரிமிதமான கனிவும் பிறக்கிறது. அவன் மற்றவர்கள் மத்தியிலே தலைவன் போல் ஆகிவிடுகிறான்.

நன்றாக உடுத்திக் கொள்ள வேண்டுமென்ற 'உடுக்கை' என்ற சொல் போலவே, வாழ்க்கையிலும் வடிவமைத்து வழங்கியிருக்கிறார்கள்.

படுக்கையில் ஒழுங்காகப்படு என்பதைக் குறிக்கப் 'படுக்கை' என்றனர். உட்காரும்போது, ஒழுங்காக உட்கார வேண்டும் என்பதற்காக அதனை இருக்கை' என்றார்கள். ஆனால் நமது மக்கள், அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஆடைகளை அணிகிறார்களே தவிர அவை உடலுக்கு ஏற்றதா, தகுதிக்கு உரியதா