பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


இவற்றையேன் பூதமென்றார்கள்? பயப்படுத்துகிற பேய்கட்கு அல்லவா பூதமென்று பெயர்.

இயற்கையின் உட்பொருள்களாகிய இந்த பஞ்ச பூதங்களும், நம்மை, பயப்படுத்துகின்றனவா, பலப் படுத்துகின்றனவா? இல்லை வயப்படுத்துகின்றனவா? பின் ஏன் அதைப் போய் பூதம் என்றனர். அதில் ஓர் பெரிய தத்துவமே அடங்கியிருக்கிறது.

பூதம் என்ற சொல்லுக்கு இறந்த காலம் என்று பெயர். நிகழ்கின்ற நிகழ்காலத்தில் நடந்து, முடிந்து, ஓய்ந்து, ஒழிந்து, ஒதுங்கிப்போன அந்தக் காலப் பொழுதைத்தான் இறந்த காலம் என்றனர்.

அப்படியென்றால், நிலம், நீர், காற்று, தீ, விசும்பு எல்லாம் ஓய்ந்து, ஒழிந்து போன பொருள்களா? இல்லையே.

அவை தோன்றிக் கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் இன்னும் இருக்கின்றனவே. இன்றும் இருக்கின்றன. நாளையும் இருக்கும். சிந்தாமல் சிதறாமல், குன்றாமல், குறையாமல், நிறையாமல், மறையாமல் நாளையும் இருக்கும்.

இதை, எண்ணும்போது, ரசிக்கும்போது அதிசயத் தையும், ஆராயும்போது ரகசியத்தையும், புதைத்து வைத்துக் கொண்டு நம்மிடையே இருப்பதால்தான் அவற்றைப் பூதம் என்றனர் நமது முன்னோர்கள். நாம் வாழ்கின்ற காலப் பொழுதை மூன்று வகையாகப் பிரித்துக் கூறினார்கள்.