பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

95



'ம' என்றால் நஞ்சு என்று ஒரு அர்த்தம், நாம் சுவாசிக்கின்ற காற்றாகிய ‘தம்’ ஆனது, காற்றிலே நஞ்சு கலந்தால் எப்படி அது உயிரைக் கொல்லுமோ அதுபோல மதம் மக்களைக் கொல்லும் என்பார்கள்.

எனவேதான் எல்லா மதங்களும், இழுத்துச் சுவாசிக்கின்ற உயிர்க்காற்றைத் தம் பிடிக்கக் காற்றுத் தருகின்றன. சுவாசம் கெட்டுப் போகாமல் இருக்கச் சுகமான வழிகளைச் சொல்லித் தருகின்றன.

உயிர் வாழ்கிற மனிதன் ஒருவனுக்கு எப்படிக் காற்றை உள்ளே சுவாசிக்க வேண்டும் என்றுதான் சொல்லித் தருவார்கள். ஆனால் மதமானது உள்ளே இழுத்துச் சுவாசித்த காற்றை எப்படி வெளியே விடுவது என்பதைத்தான் கற்றுத் தருகிறது. ஏனென்றால், காற்றைச் சுவாசிப்பது மிகவும் எளிது.

இயற்கையாகவே காற்று வேகமாக மூக்குக்குள்ளே புகுந்துவிடும். அவ்வாறு சிரமம் இல்லாமல் சுவாசித்த காற்றை வெளியே விடும்போதுதான் சிரமங்கள் பல தோன்றுகின்றன.

இந்து மதத்திலே 'ஓம்' என்று ஒரு மந்திரம். அடிவயிற்றை நன்றாக அழுத்திக் கொண்டு வாய் வழியாக ஒம் என்று காற்றை வெளியே விடுகிற மந்திரம். இந்த மந்திரத்திற்குக் காற்றை வெளியேற்றும் கலை என்று ஒரு பெயர்.

கிறிஸ்தவ மதத்திலே பாருங்கள் ஒரு மந்திரத்தைச் சொல்லி முடித்த பிறகு ஆமென் என்று நீட்டி முழக்கிப்-