பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

தொடர் போட்டிப் பந்தயங்களின் அடிப்படை நோக்கம் வெற்றி தோல்வியை விளைவித்துக் கொடுப்பது தான் என்றாலும், வழிமுறைகளும், வாய்ப்பு நிலைகளும் கொஞ்சம் மாறியே தான் அமைந்திருக்கின்றன.

எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே செல்கின்றன என்பது ஒரு மேனாட்டுப் பழமொழி.

எல்லா தொடர் போட்டிப் பந்தயங்களும், ஆட்டக்காரர்களின் திறமையை மதித்து; ஆடும் யுக்தியை வளர்த்து. போட்டி நடத்துபவர், பங்கு பெறுபவர். நடுவராகப் பணி யாற்றுகிறவர், பார்வையாளர்கள் என்று எல்லோருக்குமே எல்லாம் தருவதாக அமைந்திருப்பதால் தான், பல்வேறு விதமாகப் பிரிந்து, பாங்கான நோக்குடன், பண்பான, அமைப்புடன் பணிபுரிந்து, பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இனி, பந்தயங்களின் பல வகை பிரிவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.


I ஒரு வாய்ப்பு முறை அல்லது நீக்குமுறைப் பந்தயங்கள்
(Knock out or Elimination Tournaments)

இதிலே இருக்கின்ற வெவ்வேறு பிரிவுகள்.

அ) ஒரே ஒரு வாய்ப்பு முறை (Single elimination)
ஆ) ஆறுதல் வாய்ப்பு முறை (Consolation Type)
இ) இரட்டை வாய்ப்பு முறை (Double Knock out)
ஈ) பாக்னால் ஒயில்டு வாய்ப்பு முறை (Bagnall wild elimination)