பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

குழுவே, உள்ளகப் போட்டி வெற்றிக் குழு (Intramural Champion) என்று முடிவு செய்ய வேண்டும்.

6. வெகுமதியும் பாராட்டும்

போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு, நினைவில் இருப்பதுபோல், நல்ல பரிசுகளை வழங்கலாம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு வெற்றிக் கேடயம் அல்லது வெற்றிக் கோப்பையை வழங்கலாம். சுழல் கோப்பைகளும் தரலாம்.

உள்ளகப் போட்டிகள் புகழ்ப் பலகை (Honour Board) என்று ஒன்றை அமைத்து, அதில் வெற்றிக் குழுக்களின் பெயர்களைப் பொறித்து வைக்கலாம்.

வெற்றிக் குழுவைப் புகைப்படம் எடுத்தும், புகழ்ப் பலகையில் ஒட்டி, வெற்றியாளர்களைப் பெருமைப்படுத்தலாம்.

உள்ளகப் போட்டிகள் பற்றி சில குறிப்புகள்

1. சிறுவர், இளையோர், மூத்தோர் என்று மாணவர்களைப் பிரித்து, அந்தந்தப் பிரிவுக்குள் போட்டிகள் நடத்தி, எல்லா மாணவர்களையும் போட்டிகளில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.