பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201

14. புற வெளிப் போட்டிகள்

(EXTRAMURAL COMPETITIONS)


பள்ளிகளுக்கிடையே அல்லது (கல்வி மற்றும் தொழில், நிறுவனங்களுக்கிடையே நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளை புற வெளிப் போட்டிகள் என்று அழைக்கின்றனர்.

போட்டிகளில் பங்கு பெறுபவர்கள், தங்கள் திறமை களை மற்றவர்களுடன் போட்டியிட்டு, வெளிப்படுத்திக் காட்டி, தங்களுடைய நிறுவனங்களுக்குப் பெயரும் புகழும் ஈட்டித் தருகின்ற வாய்ப்புகளை, புறவெளிப் போட்டிகள் வழங்குகின்றன.

நிறைகள் 1. புறவெளிப் போட்டிகளில் பங்கு பெறுபவர்களின் திறமையும் வலிமையும் தேர்ச்சி பெறுகின்றன.

2. தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தின்மேல் தனியாத பற்றும் பக்தியும் பெருகும் நிலை, எழுச்சியடைகின்றன.— 13