பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237

5. ஆசிரியர்கள் தங்கள் போதனையில், மாணவர்கள் எவ்வளவு தூரம் பயனடைந்தார்கள் என்று அறிந்து கொள்ள.

6. மேலும், முன்னேற்றத்திற்காக ஆய்வும் சோதனையும் மேற்கொள்ள.

நல்ல தேர்வு நெறிக்கான அளவு முறை (Criteria)

1. எத்தனை முறை தேர்வுகள் நடத்தினாலும், ஒரே விளைவை (Result) ஏற்படுத்தித்தரக்கூடிய, நம்பிக்கையை (Reliability) ஊட்டுவதாக தேர்வு முறை அமைந்திருக்க வேண்டும்.

2. ஐம்புலன்களாலும் அறிந்து செயல்படுத்தக் கூடிய தாக (Objectivity) தேர்வு அமைந்திட வேண்டும்.

3. சிக்கல் இல்லாத எளிய தன்மை (Simplicity) கொண்டதாக தேர்வுமுறை இருக்க வேண்டும்.

4. என்றென்றும் மாறிப்போகாத நிலையான தன்மை (Standard) கொண்டதாக விளங்க வேண்டும்.

5. தேர்வுகளை நடத்த ஒரு சீரான நடை முறைகளையும் திட்டவட்டமான தகவல்களையும் தரக் கூடியதாக (Standard directions) இருக்க வேண்டும்.

6. தேர்வு நெறியானது எதனை அளக்கவேண்டும் என் பதைத் தெளிவாக சுட்டிக்காட்டி, நடத்தும் குணம் கொண் டதாகவும் (Validity) விளங்க வேண்டும்.

உடல் திறத் தேர்வுகள் (Physical Efficiency Tests)

உடல் திறம் என்பது பற்றி, பல நூற்றாண்டுகளாக ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. என்றாலும், ஒரு முடிந்த முடிவுக்கு யாராலும் வர முடியவில்லை .

அமெரிக்காவைச் சேர்ந்த சார்ஜென்ட் (Sargent) என்பவர், தசைவலிமையால் தான் ஒருவர் உடல் திறம் வளர்கிறது என்று கண்டு பிடித்துக் கூறினார்.