பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

முறையை மாற்றிக் கொள்ளலாம். மாறி மாறிக் கற்பிக்கும் முறைகளைக் கடைப்பிடிக்க, கீழே கொடுத்திருக்கும் தலைப்புகளை அறிந்து பின்பற்ற வேண்டும்.

உடற்கல்வியில் சில முக்கியமான கற்பிக்கும் முறைகள்.

1. வாய் மொழி விளக்க முறை

(Oral method)

எந்தவித செயலையும் செய்து காட்டாமல், வெறுமனே வாய்விளக்கத்துடன், பாடத்தை நடத்துதல். விளக்கத்திற்குப் பிறகு, மாணவர்களை செய்யுமாறு தூண்டுதல்,

உடற்கல்வித்துறைக்கு இது பொருத்தமான முறையல்ல. உடற்கல்வி என்பது செய்து கொண்டே கற்கின்ற கல்வியாகும்.

என்றாலும் விளக்க முறை என்பதில், அன்றாட அறிவுச் செய்திகளை, விளக்கமாக, தெளிவாகக் கூறுதல்: எளிய சொற்களில், இனிமையாக, புரியும்படி, கேட்க மகிழ்ச்சி உண்டாகும்படி பேசுதல்; தெரிந்ததிலிருந்து தெரியாத கருத்துக்களைக் கூறுதல் போன்றவையும் அடங்கும்.

2. கலந்துரையாடல் முறை

(Discussion method)

ஆசிரியர் மாணவர், பாடப் பொருள் பற்றிப் பேசி, கலந்துரையாடிக் கற்றுக் கொள்கிறமுறை.

இதுவும் வாய்மொழி விளக்கமுறையைச் சார்ந்தது தான்.