பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வைத்துக் கொள்ளலாம்.

13. போட்டியில் முதல் பரிசுக்கு சமநிலை வந்தால், எப்படி தீர்க்க முடியும்?

இரண்டு போட்டியாளர்கள் முதல் பரிசுக்குக் தகுதியாக சமநிலையில் இருந்தால், அதற்கு சமநிலை என்று பெயர். இந்த சமநிலை சிக்கலைத் தீர்க்க, அவர்களது 2 வது சிறந்த தாண்டலை பரிசீலிக்கவும். அதிலும் சமமாக இருந்து சிக்கல் ஏற்பட்டால், மூன்றாவது சிறந்த தாண்டலைப் பார்க்க வேண்டும்.

மீண்டும் சமநிலை வந்தால், இருவருக்கும் ஒவ்வொரு தாண்டும் வாய்ப்பு தந்து யார் ஒருவரை விட மற்றவர் அதிகம் தாண்டுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார்.

14. அணுகுமுறையில் ஓடிவர எத்தனை முறைகள் உண்டு.

1. 16 காலடி முறைகள் (16 Steps method)

2. 20 காலடி முறைகள் (20 Steps method)