பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிக்கெட் ஆட்டம் 1. நாணயம் சுண்டி முடிவெடுக்கும் செயல். எங்கே நடை பெறுகிறது? ஆட்டம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக இரண்டு குழுத் தலைவர்களும் ஆடுகளத்திற்குள் சென்று, நாணயம் சுண்டி முடிவெடுப்பார்கள். 2. நாணயம் சுண்டி விட்டு, எவ்வாறு முடிவெடுக்கிறார்கள்? நாணயம் சுண்டியதில் வெற்றி பெற்ற குழுத் தலைவன், புந்தை_அடித்தாடுவதா, தடுத்தாடுவதா என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எதிர்க் குழுத்தலைவனுக்கு அறிவித்து விட வேண்டும். பிறகு எந்தக் காரணத்தை முன்னிட்டும், அந்த முடிவை மாற்றவே கூடாது. 3. ஒரு குழுவில் எத்தனை ஆட்டக்காரர்கள் உண்டு? 11 ஆட்டக்காரர்கள். 5 மாற்றாட்டக்காரர்கள். 4. ஒரு கிரிக்கெட் பந்தின் கனம், சுற்றளவு எவ்வளவு? பந்தின் கனம் 5 1/2 அவுன்சில் இருந்து 53/4 அவுன்சு வரை பத்தின் சுற்றளவு 22.4 முதல் 22.9 செ.மீட்டர் வரை. 5. ஒரு பந்தடி மட்டையின் நீள அகலம் என்ன? ஒரு பந்தடி மட்டையின் நீளம் 38 அங்குலம் (96.5 செ.மீ.) அதன் அகலப் பகுதியின் அதிகமான அளவு 4 1/4 அங்குலம் தான் (10.8 செ.மீ) மட்டையின் எடை 2 பவுண் டில் இருந்து 10 பவுண்டு இருக்கும். 6. பந்தாடும் இடத்தின் (Pitch) நீள அகலம் என் ன? பந்தாடும் இடத்தின் நீளம் 22 கெஜம் (20.12 மீட்டர்) அகலப் பகுதி 3.05 மீட்டர் ஆகும். 7. ஒரு விக் கெட்டின் அகலம், உயரம் எவ்வளவு ? ஒரு விக்கெட் என்பது 3 குறிக் கம்புகளாலும் (Stemps) 2 இணைப்பான்களாலும் (Bails) ஆனதாகும். ஒரு குறிக் கம்பின் உயரம் தரையில் இருந்து 28 அங்குலமாகும். (71.1 செ.மீ) இரண் டு இணைப்பான்களின் நீளம் 11.11 செ.மீ. ஆக, ஒரு விக்கெட்டின் அகலமானது 9 அங்குலமா கும். 8. பந்தை எறியத் தொடங்கும் கோட்டின் நீளம் எவ்வளவு? பந்தெறியும் எல்லையின் நீளம் (Bowling crease) 8 அடி 8 அங்குலமாகும் - - 30