பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உட்புறமும் வெளிப்புறமும் மாறி மாறிப் பார்ப்பது போல, விரட்டும் குழுவினரை கோகோ முறையில் உட்கார வைக்க வேண்டும். - மற்ற குழுவானது தப்பி ஓடும் ஒட்டக்காரர்கள் குழுவாகும். பெரிய வட்டத்திற்குள்ளே, இவர்கள் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். விசில் ஒலிக்குப் பிறகு, நிற்கும் விரட்டுபவர் ஒடி' விரட்ட, சிறிய வட்டத்திற்குள் நிற்பவர்களை மட்டுமே தொட்டு, கோ கொடுக்கும் விதிமுறையைத் தழுவியே கோ கொடுத்து விளையாட வேண்டும். பிறகு, கோ பெறுகிற புதிய விரட்டுபவர், வட்டங்களுக்கு இடையே இருக்கும் எவரையும் தொடலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் எத்தனை பேர்களைத் தொட்டு வெளியேற்றியுள்ளார்கள் என்று இரண்டு குழுக்களின் ஆட்டத் திறமையைக் கணக்கிட்டு, வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். - 2. lossfighâ, Jr. sol silijässt i_i (Human Basketball) 50 மீட்டர் துரத்தில் உள்ள ஆடுகளத்தின் 2 எல்லைக் கோட்டிலும், ஒரு நாற்காலியைப் போட்டு, ஒருவரை மேலேறி நிற்கச் செய்ய, நிற்பவர்கள்தான் கூடையாவார்கள். = ஒரு குழுவிற்கு 20 பேர்கள் இருந்து ஆடச் செய்யலாம். ஒவ்வொரு குழுவும், தங்கள் எதிர் எல்லையில் நாற்காலியில் நிறுத்தியிருக்கும் ஆளிடம் பந்தை எறிந்து பிடித்துக் கொள்ளுமாறு ஆட வேணடும். கூடைப் பந்தாட்டத்தில் உள்ள அத்தனை விதிகளும் இந்த ஆட்டத்திற்குப் பொருந்தும் ஆடுகளத்தின் எல்லை, விருப்பம் போல இடத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். ら2.