பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. யோக முத்ரா பெயர் விளக்கம்: பத்மாசனத்தில் அமர்ந்து, பிறகு தரை நோக்கிக் குனிந்து செய்யும் ஆசன முறையாகும். செயல் முறை: முதலில் பத்மாசனத்தில் அமரவும், பிறகு, கைகளைப் பின்புறமாகக் கொண்டு வந்து, வலதுகை மணிக்கட்டுப் பகுதியை இடது கையால் பற்றிப் பிடித்துக் கொள்ளவும். ஆனால், கைகளை இறுக்கி வலிந்து பிடித்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு கைகளை சேர்த்துக் கொண்ட பிறகு, மெதுவாக முன்புறமாகக் குனிந்து, முன் நெற்றியால் தரையினைத்தொடவும், மீண்டும், பழைய பத்மாசன நிலைக்கு வரவும், - எண்ணிக்கை: , பத்மாசனத்தில் முதலில் அமர்ந்து கொள்ளவும். 2. கைகளை முதுகுப்புறமாகக் கட்டிக் கொண்டு, முன்புறமாகக் குனியவும். பயன்கள்: மலச்சிக்கல் தீர்கிறது. வயிற்றின் உள் உறுப்புக்கள் வலிமையடைகின்றன. பத்மாசனத்தில் கிடைக்கும் எல்லாப் பயன்களையும் இதில் பெறலாம். 3. பச்சிமோத்தாசனம். விளக்கம்: பச்சி மோத்தாசனம் என்பது பின் புறத் தசைகள் அனைத்தையும் முன்புறமாக வளைத் து மேற்கொள்கின்ற இருக்கை என்ற அர்த்தத்தில் அமைந்தி ருக்கிறது. ஒரு சிலர் கால் நீட்டி இருத்தல் என்றும் பொருள் கூறுகின்றார்கள். - no r, செய்முறை: விரிப்பின் மீது கால்களை நீட்டி, தலை முதுகு எல்லாம் நேரே இருப்பது போல் நிமிர்ந்து உட்காரவும், முழங்கால்கள் இணைந்தாற் போல இருக்கவேண்டும். பிறகு முன்புறமாகக் குனிந்து இரு கைகளாலும் அந்தந்தக் கால் பெரு விரலை பிடித்துக் கொண்டு இழுக்கும் பாவனையில்