பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலக் கல்வி 1. உடல் நலம் என்ன என்பதை விளக்குக: உடல் நலம் என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது. வாழ்க்கை என்பது சிறப்பாக வாழ்வதையே குறிக்கும். ஆகவே உடல்நலம் என்பது. உடலால், மனதால், உணர்வால் முழுமையாக வாழும் சுக நிலையாகும். நோயில்லாமல் இருப்பதும், முடமில்லாமல் இருப்பதும் உடல் நலம் என்று கூற முடியாது. சிறப்பாக நீண்ட நாள் வாழவும், சேவை செய்யவும் கூடிய வல்லமையை அளிப்பதே உடல் நலமாகும். உடலில் உள்ள உறுப்புக்கள் அனைத்தும் நல்ல நிலையில் பணியாற்றி, திருப்தியாக பணியாற்றவும் மகிழ்ச்சியுடன் விளையாடவும் கூடிய வகையில் இருப்பதே நல்ல உடல் நலமாகும். 2. உடல்நலத்தை உருவாக்கக் கூடிய முக்கியமான தன்மைகள் யாவை? உடல் நலத்தை உருவாக்கும் தன்மைகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. பிறப்பால் பெறும் நிலை. ஒருவர் தனது பெற்றோர் மூலம் பெறக் கூடிய பண்பு நலன்களையே பாரம்பரியம் என்பார்கள். நல்ல பாரம்பரியப் பண்புகளே வலிமையான உடலையும், நல்ல மனதையும் வடிவமைத்துத் தருகின்றன. 2. சுற்றுப்புறச் சூழ்நிலை ஒருவர் பிறப்பால் பெறுகிற அமைப்பும் நல்ல குணங்களும் சுற்றுப்புறச் சூழ்நிலையால் சிதறுண்டு போகின்றன. 1. வீடு அதன் சுற்றுப் புற சூழ்நிலை 2 சுகாதாரமான குடிநீர், உணவு, பழக்க வழக்க முறைகள், 3. சூழ்நிலையை சீரழிக்கும் சமுதாய முறைகள், திருப்தியாக, மன நிம்மதியாக வாழ்கிற சுற்றுப்புற முறைகள் எல்லாமே. ஒருவரது உடல் நலத்தை உருவாக்கவும் பாதிக்கவும் கூடிய சக்திகளைப் பெற்றிருக்கின்றன. 3. சமூக கலாசார நிலை. நமது மதங்கள். மதங்கள் கற்றுத் தரும் பழக்க வழக்கங்கள். கலாசாரங்கள். தொழில்கள், சமுதாய நடைமுறைகள். அரசியல் அமைப்புகள் எல்லாம். சமூக கலாசார சுற்றுப்புற சூழ்நிலையாக மாறி, ஒருவரின் வாழ்க்கை முறைகளையே மாற்றும் வல்லமை கொண்டிருப்பதால்தான் உடல் நலத்தை உருவாக்கும் தன்மைகளில் முக்கிய மானவைகளாக விளங்கு கின்றன. 3. நலவியல் (Hygiene) என்றால் என்ன? உடல் நலத்தை காக்கவும். மேலும் வளர்த்துக் கொடுக்கவும் கூடிய நல்லவழிகள், உடல் நல வழிகள் என்று அழைக்கப்படுகின்றன. நாம் 56