இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102
உடற்கல்வி என்றால் என்ன?
5. மதமும் தத்துவமும் ஒன்றை ஒன்று தழுவியே உலகில் இடம் பெற்றிருக்கின்றன.
அதாவது ஒரு உண்மைவாதி, தனது மத நம்பிக்கையுடன் தத்துவ அறிவின் வழி பெறுகிற அனுபவத்தையும் இணைத்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
உண்மைத் தத்துவமும் கல்வியும்
- 1. கல்வியானது மனிதரின் ஆராயும் அறிவுத் திறனை வளர்த்து விடுகிறது.
- 2. கல்வி வாழ்வை வளப்படுத்துவதற்காகவே பணியாற்றுகிறது.
- 3. கல்வியானது சிறந்த குறிக்கோள்களுடன் விளங்குகிறது.
- 4. கல்விமுறைகள் எல்லாம், ஒரு ஒழுங்கான பண்பாட்டு முறைகளைப் பின்பற்றிப் பணியாற்றுகின்றன.
- 5. கல்வியின் பாடத்திட்டங்கள் யாவும் விஞ்ஞான முறைகளின் அடிப்படையிலே தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
- 6. கல்வியானது கற்றுத்தருவதுடன் நிறுத்தி விடாமல், கற்ற அளவினை அளந்தறியும் கருவிகளையும் தன்னகத்தே கொண்டு துலங்குகிறது.
உண்மைத்தத்துவத்தின் கொள்கைகளுடன், கல்விக் கொள்கைகள் இணைந்திருப்பதையும் நாம் காணலாம். அதுபோலவே, உண்மைத் தத்துவத்துடன், உடற்கல்வி நடைமுறைகள் ஒத்துப்போவதையும் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.