பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

103



உண்மைத் தத்துவமும் உடற்கல்வியும்

1. உடற்கல்வி வாழ்க்கைக்காகவே இருக்கிறது.

உடற்கல்வி, மாணவர்களை உலகை அறிந்து கொள்ளும் வகையில், அனுசரித்து நடந்து கொள்ளும் முறையில் தயார் செய்கிறது. வாழ்க்கைக் கல்வியாக உடற்கல்வி இருக்கிறது.

2. மாணவர்களின் உடல் திறனை அதிகப்படுத்திட, உடல்கல்வி நிறைய பணியாற்றி உதவி வருகிறது.

உடல் தகுதியுள்ள ஒருவர் தான், சமுதாயத்தில் சிறந்தவராக விளங்கி, சேவை செய்ய முடியும் என்ற உண்மைத்தத்துவம், உடற்கல்வியுடன் இணைந்திருப்பதை நீங்கள் அறியலாம்.

3. உடற்கல்வி செயல் திட்டங்கள் யாவும் விஞ்ஞானக் கருத்துக்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன.

உண்மைத் தத்துவம் போலவே, உடற்கல்விப் பாடத் திட்டங்கள் யாவும், விஞ்ஞானக் கருத்துக்களின் தொகுப்பாக, அடிப்படை இயக்கமாக அமையப்பெற்றிருக்கின்றன.

4. உடற்பயிற்சிகள் எல்லாம், கற்கும் திறனில் முக்கிய பங்கை வகித்து, முன்னேற்றம் அளிக்கின்றன.

உடற் பயிற்சிகள் அடிப்படைத் திறன் நுணுக்கங்களை வளர்த்து, பயிற்சியாளர்களின் திறமைகளைப் பெருக்கி, சிறந்த எதிர்பார்ப்புகளை வளர்த்து செழுமைப் படுத்துகிறது.

5. பள்ளிக்களுக்கிடையே நடைபெறுகின்ற விளையாட்டு நிகழ்ச்சிகள், போட்டிகள் யாவும்,