இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
106
உடற்கல்வி என்றால் என்ன?
அனுபவத் தத்துவமும் கல்வியும்
கல்விக் கொள்கைகள் பல அனுபவத் தத்துவத்தின் கொள்கையாக இருப்பதை நீங்கள் இங்கே அறியலாம்.
- 1. தனிப்பட்ட மனிதர் எல்லோருமே, அனுபவம் மூலமாகவே கற்றுக் கொள்கின்றார்கள்.
- 2. கல்வி என்பது சமுதாய வளர்ச்சிக்கான நோக்கத்தையே பெரிதும் கொண்டிருக்கிறது.
- 3. கல்வியானது குழந்தைகளின் முழு வளர்ச்சி குறித்தே தனது பணியை திறம்பட ஆற்றிக் கொண்டிருக்கிறது.
- 4. மாறி வரும் உலகத்தில், பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
குறிப்பு : வாழ்வின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற அறிவும் அனுபவமுமே முக்கியமாகவேண்டும் என்கிற கருத்துள்ள அனுபவத் தத்துவத்திற்கு, கல்வி ஆற்றி வருகிற பணிகளை அறிந்து கொண்டோம். இனி உடற்கல்வியின் உதவியையும் காண்போம்.
அனுபவத் தத்துவமும் உடற்கல்வியும்
- 1. பல திறப்பட்ட விளையாட்டுச் செயல்களில் மாணவர்கள் பங்கு பெறும்போது, மிகவும் அர்த்தமுள்ள, அறிவார்ந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன.
விளையாட்டுப் போட்டிகள், வெளிப்புற முகாம் வாழ்க்கை, நீரில் உலவும் படகுப் பயணங்கள், நடனம், எல்லாம் நிறைந்த அனுபவங்களைத் தருகின்றன.
- 2. இயற்கையாகவே உடற்கல்வியில் போதிக்கப்படும் செயல்கள் யாவும், சமூக நலன்களை மிகுதிப்படுத்தும் அளவிலே தான் அமைந்திருக்கின்றன.