இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
108
உடற்கல்வி என்றால் என்ன?
- 1. எந்த உண்ைமப்பொருள் இவ்வுலகில் இருப்பதாக இருந்தாலும், அது இயற்கையின் இயைந்த பொருளாகவே இருக்கும்.
இந்த நில உலகில் நாம் பார்ப்பது, கேட்பது, அறிவது எல்லாம் இயற்கை மூலமாகவே நடக்கின்றன என்பது இந்தத் தத்துவத்தின் முக்கிய குறிக்கோளாக விளங்குகிறது.
- 2. எல்லா மதிப்பான நிலைமைகளுக்கும், இயற்கையே முக்கிய மூலமாக விளங்குகிறது.
- 3. சமுதாயத்தை விட, தனிப்பட்ட மனிதனே முக்கியமானவன்.
ஏனென்றால், சமுதாயமானது தனிப்பட்ட மனிதனும்,இயற்கையும் கொடுக்கின்ற பயன்களைக் கொண்டே பெருமை பெறுகிறது என்பதையே தலையாய நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
மனிதன் பெறுகிற எல்லா அறிவும், பயன்களும் இயற்கை மூலமாகவே கிடைக்கிறது. என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தத்துவத்தைப் படைத்தவர்கள் என்ற பெருமையைப் பெறுபவர்கள் கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானிகள் டெமாகிரிட்டிஸ், லியூசிப்பஸ், எபிகுரஸ், கமினியல் என்பவர்கள் ஆவார்கள்.
இவர்களைப் பின்பற்றி, இயற்கைத் தத்துவத்தை வளர்த்தவர்கள் ரூசோ, பாசிடோவ் பெஸ்டாலோசி, ஹெர்பர்ட், ஸ்பென்சர் போன்றவர்கள்.
இயற்கைத் தத்துவமும் கல்வியும்
- 1. தனிப்பட்ட மனிதனின் இயற்கையாக எழுகிற தேவைகள் அனைத்தையும் தீர்த்து, திருப்தி