பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

117


நுண்மையாக வளர்ந்தன.அத்துடன் இயற்கையை அறிந்து கொள்கிற ஆற்றல்மிக்க அறிவு, வளர்ச்சி பெற்றது. நினைவாற்றல் எழுச்சிபெற்றது.

உடலும் உயிரும்

மனிதன் உடலாலும் உயிராலும் உலா வருகிறான். அவனுடைய நினைவுகள் தூண்ட உடலுறுப்புக்களால் செயல்படுகிறான். உடலானது மனிதனுக்குக் கிடைத்துள்ள அரிய புதையலாகும். அந்த உடலை பலஹீனப்படுத்த மனிதனும் விரும்ப மாட்டான். வலிந்து முயற்சிகளும் செய்ய மாட்டான்.

உடலை உன்னதமாகக் காப்பாற்ற உடற்கல்வி உறுதுணையாக வருகிறது. அதன் அடிப்படை நோக்கம் உடலை (Physical) வலிமைப்படுத்துவதாகும். அதற்குரிய பயிற்சிகளைச் செய்தால் தானே உடல் வலிமை பெறும்? சூழ்நிலைகளால் மனித உடலில் மாற்றங்கள் நிகழ்வதால், அதற்கேற்ற தன்மையில் உடற்கல்வி கருத்துடன் செயல்படுகின்றது.

நாகரீகமும் நலிவும்

நாகரிகக் காலம் எந்திர மயமாகிப் போனதால், மனிதர்களின் உழைக்கும் நிலை மாறிப் போய்விட்டது. உழைப்பில்லாத உடல் ஓடாகத் தேய்ந்து நலியும் நிலையும் ஏற்பட்டு விட்டது. இதைத் தான் உயிரியல் அறிந்து, பயன்படுத்தப்படாத உறுப்புக்கள் பாழாகிப்போகின்றன பின்பதை தெளிவுபடுத்தி, உழைக்கச் சொல்கிறது.

இந்தக் கருத்தைத் தான் இயற்கைத் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்த தத்துவஞானி ரூசோ, பின் விருமாறு போதிக்கிறார்.