பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

129


அப்படி எடுக்கப்படும் முடிவுகளில் தான் ஒழுங்கமைப்பும், உண்மையான வளர்ச்சிகளும் உண்டாகின்றன.

ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் ஈடுபடுகிற செயல்களின் மூலமாகவே தங்கள் உடல் அமைப்பைப் பெற்றுக்கொள்கின்றன.இதற்கு ஒரு சான்றை இங்கே நாம் காண்போம்.

அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றுகிற ஒருவர், நாள் முழுதும் முன்புறமாகக் குனிந்து, தங்கள் கடமைகளை செய்து வருகின்ற காரணத்தால், முன்புறமாக குனிந்து கூன்போட்டு நடக்கும் உடலமைப்பைப் பெற்று விடுகிறார். அது அவரது செயல் முறைகளால் ஏற்பட்டது.

வயல் வெளிகளில், தொழிற் சாலைகளில் உழைக்கின்றவர்கள் நிமிர்ந்த தோற்றமும், வலிமையான உடலமைப்பும் கொண்டவர்களாகத் திகழ்கின்றார்கள். ஆகவே, செய்கின்ற தொழிலுக்கேற்ப தேகம் உருவாகிறது என்ற உண்மைதான் நமது உடற்கல்விக்கு உகந்த குறிப்பாகும்.

குழந்தைகளுக்கு வளைகின்ற கனமற்ற எலும்புகள், அதிகம் வளர்ச்சிபெறாத தசைகள் இருக்கின்றன.நன்றாக விளையாடும் போது, உரிய உடற்பயிற்சிகளைச் செய்யும்போது, குழந்தைகளின் உடலமைப்பு சிறப்பாக அமைகிறது.

அதனால் தான், உடற்பயிற்சிகள் உடலாமைப்பில் உண்டாகியிருக்கும் குறைபாடுகளைத் திருத்தி அமைக்கின்றன என்று வல்லுநர்கள் விளக்கம் கூறுகின்றார்கள். அத்துடன், வாழ்வில் சந்திக்க இருக்கின்ற பிரச்சினை