140
உடற்கல்வி என்றால் என்ன?
கிறது. பெண் பெரியவள் ஆனவுடன், பையன்களை விட பெண்ணின் உயரமும் எடையும் வேகமாகக் கூடி விடுகிறது.16 வயது ஆனதற்குப் பிறகு, பெண் வளரும் வேகமும் குறைந்துபோகிறது.ஆனால் ஆணுக்கு வளர்ச்சி 23 வயது வரை தொடர்ந்து கொண்டே செல்கிறது.
2. உடலமைப்பில் வேறுபாடு: பெண்ணின் உடல் உறுப்புக்கள் யாவும் மென்மையாகவும், மிக நுண்மையாகவும் ஆக்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணம் பெண் உடலில் உள்ள வலிமையற்ற எலும்புகளும் தசைகளும் தான்.
பெண்ணின் உடலில் உள்ள எலும்புகள் ஆண்கள் உடலில் இருப்பதைவிட குட்டையானவை. ஆனால் கனமானவையும்கூட
பெண்களின் இடுப்பெலும்பு அமைப்பு (PelvicGirdle) ஆண்களைவிட சற்று அகலமானது. இந்த அமைப்பும் பெண்களுக்கு 20 வயதாகும் போதுதான் விரிவடைந்து கொள்கிறது.
தோள்பட்டை அமைப்பில் ஆண்களைவிட பெண்களுக்கு வலிமை குறைவு. அதனால்தான் தோள் வலிமை குறைவாக இருக்கிறது.
பெண்களின் தொடை எலும்புகள் இடுப்பெலும்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கிற விதத்தில் ஒரு சிறிது கோண அமைப்பில் வேற்றுமை இருப்பதால்,பெண்களின் புவிஈர்ப்புத்தானம் சற்று தாழ்வாகவே விழுகிறது.
எப்பொழுதும் ஆண்களின் உடல் தசைகள் எடையை விட பெண்களின் தசை எடை குறைவாகவே உள்ளது.