இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
145
கிறது. இவர்களுடன், உளவியல் அறிஞர்கள் பிரித்த பிரிவுகளும் ஒன்று போல் இருக்கிற உண்மையையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
கிரெஸ்ட்ச்மெர் | ஷெல்டன் | உளவியலாரின் |
பிரிவுகள் | பிரிவுகள் | பிரிவுகள் |
1. பிக்னிக் | என்டோமார்ப் | என்ஸ்ட்ராவெர்ட்ஸ் |
(Pyknic) | (Endomorph) | (Extroverts) |
2. அத்லெடிக் | மெசோமார்ப் | ஆம்பிவெர்ட்ஸ் |
(Athletic) | (Mesomorph) | (Ambiverts) |
3. ஏஸ்தெனிக் | எக்டோமார்ப் | இன்ட்ராவெர்ட்ஸ் |
(Astenic) | (Ectomorph) | (Introverts) |
வில்லியம் ஷெல்டன் என்பவர் உடல் அமைப்பை மட்டுமே ஆய்வு செய்து பார்த்திருக்கிறார். உடல் அளவை (Size) அல்ல. உடல் அமைப்பு (Shape) ஆய்ந்த அவர், அதற்குள் அமையப்பெற்ற தனிப்பட்டவரின் உடல் அமைப்புக்காக ஒரு அளவுகோலை அமைத்து 1 முதல் 7 எண்ணிக்கை வரை அமைப்பு நிலையை விரித்துக் காட்டினார்.
எப்படியிருந்தாலும், உடல் பிரிவுகள் அமைப்பாலும் அளவாலும், அவற்றிற்கேற்ப குணாதிசயங்களாலும் அமைந்துள்ளன என்பதைப் பற்றி இனி விளக்கமாகக் காண்போம்.
1. பெரு உடல் அமைப்பு (Pyknic, Endomorph)
பெரிய உடல் அமைப்பு என்று பெயர் பெற்றிருக்கும் இவ்வுடல் பிரிவானது, உயரத்திலும், அகலத்திலும் பெரிதாகவே அமையப்பெற்றிருக்கிறது.