பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

உடற்கல்வி என்றால் என்ன?



1. வாழ்க்கை என்பது இயக்கமே உடற்பயிற்சி என்பது இயக்கத்திற்கு இனிமையான, இதமான உணவு போன்றது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 6 மணி நேரமாவது விளையாட்டுக்களிலும் பயிற்சிகளிலும் பங்கு பெறுதல் சிறந்த உடல் வளர்ச்சியையும், திறன் நுணுக்கங்களையும் வளர்த்துவிடும்.

தொடர்ந்து உடலியக்கச் செயல்களில் ஈடுபடுவதே மனித வாழ்க்கையை மகிமைப் படுத்தும் புனித காரியமாகப் போற்றப்படுகிறது.

2. நல்ல பாரம்பரியம், சுகமான சுற்றுப்புற சூழ்நிலை, சத்துள்ள சம நிலை உணவு, எல்லாம் உடலியக்கத்தில் உற்சாகமாக ஈடுபடத் தூண்டி, பாடுபட வைத்து, பெரும் பயன்களை பொழிகின்றன. நீண்ட ஆயுளையும், நிறைவான உடல் நலத்தையும் நல்கும் பயிற்சிகளுக்கு மேலே கூறியவை முனைந்து உதவுகின்றன.

3. உடல் அமைப்பும் உடற் பயிற்சிகளும் ஒன்றுக்கொன்று உறுதுணையானவை. ஒன்று ஒன்றால் பெருமைப்படுகிறது. அதனால் உடல் அமைப்புகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட பயிற்சிகளை அளித்து, ஓங்கிய எதிர்பார்ப்புகளைப் பெற்றிட வேண்டும்.

4. விளையாட்டுக்களையும் உடற்பயிற்சிகளையும் எல்லோருக்கும் எல்லாம் என்று ஏகபோக மாக்கிவிடக் கூடாது. ஆண்பெண் பாகுபாடு, வயது, வலிமை, திறமை, செயல்களைத் தாங்கும் தேகத்தின் ஆற்றல், செயல்படும் செயல்களைத் தாங்கும் தேகத்தின் ஆற்றல், செயல்படும் வல்லமை, ஆர்வம், விருப்பு, வெறுப்பு இவற்றை எல்லாம் பங்கு